களனிவெளி வீதியில் புகையிரத சேவைகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும், நாவல – நாரஹேன்பிட்டி புகையிரதக் கடவையை மூடுவது குறித்தும் புகையிரதத் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி மற்றும் நுகேகொடை புகையிரத நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள நாவல – நாரஹேன்பிட்டி வீதி புகையிரதக் கடவையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 01 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வரை களனிவெளி பாதையில் கொழும்பு கோட்டைக்கும் நுகேகொடைபுகையிரத நிலையத்திற்கும் இடையிலான புகையிரத சேவைகள் இடம்பெறமாட்டாது.
மேலும், அன்றைய தினம் பிற்பகலிலும் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் களனிவெளி பாதையில் புகையிரதம் இயங்கும் நேரங்கள் குறித்தும் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









